......

அன்புடன் சோமன்.....

திங்கள், 12 ஜூலை, 2010

யாரிடம் சொல்வேனடி தோழி!

பாரதிப்புலவனிடம் எனக்கு இஷ்டமான வரிகள் ஏகமாய் உண்டு!


கண்ணம்மா   என்று    விளிக்கும்  அத்தனை   பாடல்களிலும்
என்னை இழந்திருக்கிறேன்.    'ஆசை முகம் மறந்து போச்சே'
என்று   உருகும்    வரிகளின்   ஏ'காரத்தில்  இசையின்பம்
கொட்டிக்கிடக்கும்.     அந்த பாடல் இன்னும்   என்    காணாது
போன காதல்களை எப்போதும் மீட்டுவதாகவே இருக்கிறது!
'வண்ணப்படமும் இல்லை கண்டாய் இனி வாழும் வழி என்னடி
தோழி? '   என்று அவர் அரற்றும் போது  வெறும் நினைவுகளாகவே
நம் நெஞ்சு பூராவும் நிறைந்து கிடக்கும் நல்ல உள்ளங்களை
நினைத்து விம்முகிறது மனம். 
 
வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போதெல்லாம்  பேனாவை
என்னிடம் தந்துவிட்டு மறந்து போகும் ஒரு இனிய தோழி!  
"பாக்கும் போதாச்சும் என் ஞாபகம் வரும்  அப்பதான மறக்க மாட்டீங்க!"  
என்று ஒரு போடு போடுவாள் என்றாவது!   வெறும் பார்வையாலேயே
போகுமிடமெல்லாம் துரத்தும் அன்பு.  
 
அப்போது அலுவலகத்திற்கு கணிப்பொறி வந்திருந்த புதிது.  நானும் அவளும்
மட்டும் தான் டைப்பிஸ்ட்டுகள்.   மூட்டை மூட்டையாய் அவளுக்கு வேலை
இருக்கும் எப்பவுமே!   நான் கொஞ்சம் ஜிலோவென்று திரிவேன். 
முதன் முதலில் நான் தான்  கம்ப்யூட்டரில்  மெயில் மெர்ஜில் லெட்டர் அடிக்க
கற்று,   அவளின் ஒரு நாளைக்கு முப்பத்தி ஐந்து தினப்படி அட்வைஸ் லெட்டர்கள்
அத்தனையையும் ஒரு ஷாட்டில் என்  பிரிண்டர் அடித்து தள்ளி விட்ட அழகைப்பார்த்து
மிரண்டு போய்  விட்டது.
 
ஒரு நாள் மணி மதியம் மூணு இருக்கும்.  லெட்டர்   பிரிண்ட் 
தொடர்ந்து போய்க்கொண்டு  இருந்தது.   நான் அதைக்கவனித்துக்கொண்டிருந்தேன். 

0 கருத்துகள்: