......

அன்புடன் சோமன்.....

திங்கள், 19 ஜூலை, 2010

என் சகாபிதீன்  ஊரிலிருந்து வந்தாச்சுன்னு நினைக்கறேன்.   எல்லாத்துக்கும் சொல்லிடணும். 
வந்தவுடனே தினத்துக்கு ரெண்டு மூணுன்னு போட ஆரம்பிச்சாச்சு.  இன்னும் கொஞ்ச நாளைக்கு
இப்பிடித்தான்!      நுழைஞ்ச ஒடனே கடைசி தினத்தைப்பற்றி ஒரு கவலை.. அடுத்து,  கீராவை
கொஞ்சம் கொடைஞ்சுட்டார்!   அதுக்கு மனசு தாளாமல்  தான் இந்த பதிவு!

இந்தக்கிழம் ராஜ நாராயணம் இருக்கே,   இதோட காது குடையும் சொகம், 
வேட்டி கிழிஞ்சு போன கதை,    பாட்டு கேட்கும் ஆசை,  இதெல்லாம்  துரத்தி துரத்தி படிக்கணும்.
ஆஹான்னு எழுதியிருப்பார் மனுஷன்!    கை இத்தனை வண்ணமா எழுதறதுக்கு
வணங்கினா  வேற என்ன  வேணும்.!   

சில சமயம் சந்தோஷப்படும் போது  'ஒரு நல்ல தோடி கேட்ட மாதிரி'  அப்படின்னு சொல்லிட்டு
போவார்.  சங்கீதம் பாடறதுக்கு " கேக்கற காது நல்லதா அமையணும்"' னு சொல்லுவார் எங்க சார்.
கீராவின் அந்த விளாத்திகுளம் ஸ்வாமிகள் பற்றியும்,  அண்ணாச்சி,  காருகுறிச்சி
இவர்கள் பற்றியெல்லாம் சிலாஹிப்பதைக்கேட்டு வெறுமே ரசிப்பதற்கே இன்னும் நாம்
படிக்கணும் போலெல்லா இருக்குன்னு தோணும்.   அது ஒரு சொஹம். 

படைப்பாளிக்கு எப்பவும் வாசிக்கறவன் மேலே ஒரு வாஞ்சை இருக்கணும்!
என் தங்கை என்ன எல்லாமோ போட்டு குழம்பு வைப்பாள்.  என்னடி இது
நல்லா  இல்லன்னு சொல்லிட்டே இருப்பேன்.  ஆனால்  அம்மா  வெற்றுக்கையை ரசத்தில்
தொட்டாலே அற்புதமாக இருக்கும்.  இது வெறும்  தோணலான்னு தெரியலை.
ஆனா ஒரு தடவை சொன்னார்கள்,    "நான் உங்களுக்கு மட்டும் பண்றேன்,  அவ அவளுக்கும்
பண்ணிக்கறா' ன்னு.   

தனக்கு தோணுவதை எல்லாம் எழுதாமல்,  அட, 
இது குடுத்தா நல்லா இருக்குமா!   இப்பிடி எழுதினா நல்லா இருக்குமா!
இப்படி பாடினா இது எடுபடுமான்னு படைக்கறவன் மனசு கிடந்து தவிக்கணும்!
வாசகன் மனது நம்மை முழுதும் ரசிக்கும்போது ஒரு உன்மத்த நிலையில் நாம்
என்ன  எழுதினாலும்,  பாடினாலும்  நெகிழும்.  எஸ்.வி. சேகர் டிராமா ஜோக் மாதிரி.
இன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்னாக்கூட எல்லாரும் சிரிப்பார்கள். 
'பாடும் பணியே பணியாய் அருள்வாய்',   'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' ன்னு
சொல்லறதெல்லாம் இந்த வரம் பற்றியது தான்!

தோணும்போது இன்னும் எழுதறேன்!   நேத்து தோழியை பாதியில்
விட்டுட்டேன்!   அதையும் சேத்து எழுதிடறேன்!   சரியா!

அன்புடன் சோமன் .........

0 கருத்துகள்: