......

அன்புடன் சோமன்.....

திங்கள், 7 ஜூலை, 2008

கனவுத்தொழிற்சாலைகள்

தமிழ் சினிமாக்களில் கல்லூரிகளைக்காட்டும் போதெல்லாம் வேதியியல் மாணவர்களாகவே இருப்பார்கள் பெரும்பாலும். நாங்களெல்லாம் காலர்களைத்தூக்கி விட்டுக்கொண்டு திரிவோம்.. கேவலமாகத்தான் காட்டுவார்கள் என்றாலும், கொஞ்சம் கலர்கள் பிப்பெட்டு, பியூரெட்டு, பரிசோதனைக்காட்சிகள் காட்டலாமே என்பதற்காக இருக்கும்...

திடீரென்று ஆசிட்டை வீசலாம்.. இழுத்துப்போட்டு பாட்டில், குடுவை சமாசாரங்களை உடைக்கலாம். எதிரும் புதிருமாக நின்று கொண்டு சவால் விடலாம். இப்படி...

ஸ்வப்னம்...என்று ஒரு படம்... தமிழ் தான்... நம்ம எஸ்.வி.சேகர் தான் நாயகர்....அருமையான படம்... யூகி சேது போன்றவர்கள் எல்லாம் மாற்று சினிமாக்கள் என்ற முயற்சியில் அண்டாக்கள் எல்லாம் அடகு வைத்தாவது தம்மைக் கூவி விற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்..திடீரென்று ஒரு சப்பையான வெற்றிப்படம், கேட்க நாதியில்லாமல் ஒரு உன்னதமான கலைப்படம்...குப்பையும், கூளமுமாக நம்மை கடந்து போகும்.. இளையராஜா ஆர்வக்கோளாறால் எல்லாப்படத்துக்கும் பாட்டு, ஆர்.ஆர் அத்தனயிலும் பொளந்து கட்டியிருப்பார். திகட்டித் தினவெடுக்கும்.....

இடையில்... கனவுத்தொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம்,என்று நம்மாள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவார்.......ஒவ்வோரு அத்தியாயமும்....அவரோடு ஒடிப்போயிடலாம் போல அத்தனை சுகமாக இருக்கும்...

0 கருத்துகள்: