......

அன்புடன் சோமன்.....

செவ்வாய், 8 ஜூலை, 2008

நல்ல எழுத்து எதையாச்சும் படித்துப் புளகாங்கிதமடையும்போது உடனே நமது அபிமானத்திற்குறிய எழுத்துலக ஆசாமிகள் யாருக்காவது போன் போட்டு பாராட்டலாம் என்றோ திட்டலாம் என்றோ தோணும்போது வசமாக அவர்கள் மாட்டுவதில்லை. போன் போட்டால் அவர்கள் வீட்டு நாயோ/வேலைக்காரியோ தான் எடுத்து ஐயா ஊரில் இல்லையென்றும் வந்தவுடன் சொல்வதாகவும் சொல்லி நம் பேரைக்கேட்பார்கள். 'சை' என்று வைத்துவிடுவோம்....அப்புறம் பார்க்கும்போது நாம் கேட்கவும் நினைவிருப்பதில்லை.

ஏய்யா? இந்த வெட்டிக்கலவரம் பண்றீங்கவென்று என்று ஒரு பாவப்பட்ட எழுத்தாளனிடம் விசாரித்ததிலிருந்து...,

அட...பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா கல்ல விட்டு எறியறதுக்கும், கட்டிப்பிடிச்சு உம்மா வைக்கவும் நாலு பேர் திரிவாய்ங்க.....இது தெரியாம ஒருதடவை ரசிகர் கூட்டத்தில் மகிழ்ந்து போய் இருந்தப்ப இப்பிடித்தான் 'அந்த மதுமிதாவை அனாதையாக்கிட்டயேய்யா'ன்னு ஒருத்தன் போளேர்னு அப்பிட்டான்.....அதிலருந்து எந்தப்பய கிட்டயும் வச்சுக்கிறதில்ல.

நம்ம நம்பியாரில்ல, நம்பியார்! நேர்ல பாத்தன்னு வை......அவ்வளவு சாத்வீகம்....அமைதி....ஐயப்பா சரணம்...இதெல்லாம் எதுக்கு? ஒரு பாதுகாப்பு தான்.....

'வரட்டுமா தம்பி....அப்பப்ப வாங்க'ன்னூட்டு போயே போனார்.......

0 கருத்துகள்: