......

அன்புடன் சோமன்.....

செவ்வாய், 8 ஜூலை, 2008

கோடுகள் படுத்திய பாடு.

என் கல்லூரிப்பருவக் காதல்களையெல்லாம் அங்கங்கே சொல்லி வருகிறேன்...
உணர்ந்த உன்னதங்கள்.....பார்த்த இடங்களெல்லாம், படித்த வரிகளெல்லாம்,, கேட்ட இசைகளெல்லாம் இன்னும்...இன்னும்...
---------------------------------------
விகடனின் நடுப்பக்கம் மதன் குத்தகை எடுத்திருந்தார்.....
கார்ட்டூன்கள், .....ஐய்யோ அந்த இரட்டை வால் ரங்குடு...,
சிரிப்பு திருடன்..., முன் ஜாக்ரதை முத்தண்ணா,
எத்தனை அருமையான கோடுகள்......

ஒரு அரசியல்வாதி கேட்பார்....பரிதாபமாக.....' மாணாக்கர்களே....அரசியலில் ஈடுபடாதீர்கள்.... நாங்கள் என்றைக்காவது படிப்பில் ஈடுபட்டிருக்கிறோமா? ' என்று.....
பார்க்கவேண்டுமே அந்த முகத்தை.....

அவருடைய கார்டூன்களில் பெரும்பாலும் நடிகைகளை ஒரு பேக்குகள் மாதிரி தான் சித்தரிப்பார். ஒருமுறை நடிகை லட்சுமி கூட ஒரு பேட்டியில் அவரைக்கேட்டார், ஏதோ சொல்லி சமாளித்துவிட்டார். ஒரு நடிகையிடம் இந்திராகாந்திக்கு அப்பா யாரென்று கேட்ட போது போளேரென்று 'மகாத்மா காந்தி' என்றதாம்...கிளிஞ்சுது போ....என்று நமக்கே தோணுதில்ல....

மகா உன்னதமான ப்ரகிருதி....சிரிப்பு கதைகள் முயற்சித்திருக்கலாம்....ஆனால் அறிவியல்...,வரலாற்று நிகழ்வுகள் என்றுபோய் இப்போது சினிமா...

0 கருத்துகள்: