......

அன்புடன் சோமன்.....

செவ்வாய், 29 ஜூலை, 2008

______________________________________________________________________________

முன்பு ஒரு விமரிசகர் இருந்தார். பெயர் சொல்லக்கூடாது வம்பாய்ப் போகும். ஒரு வித்வானிடம் வந்தார்.
'கச்சேரிகளுக்கு நான் விமர்சனம் எழுதறதையே விட்டுட்டேன் இப்பல்லாம்' என்றார். ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டார் வித்வான்.

அதிலென்ன இவருக்கு சந்தோஷம் என்று குழம்பிப்போனார் விமரிசகர். பின்னே என்ன., எப்ப எழுதினாலும்
வரிசையாக மெனு கார்ட் மாதிரி இந்த பாட்டு, அந்த பாட்டு, பக்க வாத்யம் பக்காவாத்யம், வயலின் நிழல் போல் தொடர்ந்தார், கடம் அனுசரணை இப்படி. வேறு ஒரு வார்த்தையும் கிடையாது. குறிப்பாக எதையும் சொல்வதில்லை. கடனேயென்று. அவர் சொன்னார் பின்னே என்ன சார்! பத்திரிக்கை தர்றது, ஒரு துளியூண்டு இடம். இதில் என்னத்தை எழுத. யாருக்கும் விரோதம் இல்லாமன்னா இப்படித்தான்.

இன்னொரு விமரிசகர். ஆசாமி எப்போ வருவார் எப்போ போவார் என்று தெரியாது. கடைசி மூலையில் இருப்பார் பூனை மாதிரி வந்து விடுவார். திடீரென்று எழுந்து போவார். எதைக்கேட்டார் என்ன எழுதப்போதிறார் என்று எவனுக்கும் தெரியாது. வராமலே கூட விசாரித்து எழுதி விடுவார். ஒருதடவை இவர் ஆஹா ஓஹோ என்று நடந்ததாக எழுதியிருந்த கச்சேரி ஏற்கெனவே கேன்சலாகி இருந்தது.

மற்றொருவர். இன்னிக்கு அந்த கல்யாண வசந்தத்தை ஒரு அதகளம் பண்ணிடலாம்னு நினைக்கும்போது அகஸ்மாத்தாக ஓரத்தில் இந்த மனிதர். எதுக்கு வேலியில் போறதை வேட்டியில் விட்டுக்கொள்வது என்று பழைய கல்யாணியையோ காம்போதியையோ பிழிந்துவிட்டு வந்து சேரவேண்டியது. ஆசையாய் எதாச்சும் ராகம் பாடும்போது சடேரென்று தொலைந்ததை எடுக்க போறது போல் புறப்பட்டு போவார். இன்னிக்கு கொஞ்சம் தொண்டை சரியில்லைன்னு ஏதாச்சும் சமாளிக்க நினைத்தால் எதிரே இந்த பிரகஸ்பதி.

எழுத்தும் வெகு கூர். மேற்படி வித்வான் வேறு ஏதாச்சும் தொழில் பண்ணலாமே என்கிற ரீதியில் எழுதி வைப்பார். வரும் ஒன்றிரண்டு தேங்காய் முடிக்கும் வந்தது வினை.






0 கருத்துகள்: