......

அன்புடன் சோமன்.....

ஞாயிறு, 20 ஜூலை, 2008

பொதுவாகவே, எழுத்துப் போடுவது என்று சொல்வார்கள். அங்கிருந்தே படைப்பாளி ரசிகனுடனான தன் பயணத்தை தொடங்கிவிடுகிறான். பழைய பதினாறு வயதினிலே, கிழக்கே போதும் ரயில் போன்ற படங்களின் துவக்கம் பாருங்கள். படத்தின் களம் பூராவும் விளங்கி விடும். ஒருமாதிரி ரசிகன் தயாராகி விடுவான். அந்தக்கால கட்டங்களில் உபால்டு போன்றோர்களெல்லாம் கொடி கட்டி பறந்தார்கள். டைட்டில்ஸ் ஜெயராமன் என்று ஒருவர் அவர். பெயர் வராத படம் இல்லை. பரணி என்று ஒரு ஆர்ட்டிஸ்ட் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஓவியராகவே வருவார். இப்போது அவர் இல்லை.
அவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. பேனர் ஓவியங்கள் கூட அப்படித்தான். ஜேக்கப், எம்.எப்.ஹுசேன் போன்றோர் கூட பேனர் பேர்வழிகள் தான். நானெல்லாம் அந்த எழுத்துகளின் வடிவில் மயங்கி இருப்பேன். படம் முடிந்தும் கிளம்ப மாட்டேன். அப்படியே எழுத்துகளின் ஓட்டம் ஒரு ஆனந்தமாக இருக்கும். பாக்யராஜ், பார்த்திபன், போன்ற பலரின் பெயர் போடும் இடம் ஒரு சஸ்பென்ஸ்.

******************************
நல்ல பச்சை மிளகு காய்கறிக்கடையில் கிடைக்கும். அதை அப்படியே போட்டு கல் உப்பு விட்டு குலுக்கவும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். கொஞ்ச நாள் ஊறிய பிறகு தொட்டுக் கொள்ளுவதைத்தவிர........ சரியா? ... தயிர் சாதத்துக்கு தேவாமிர்தமாக இருக்கும். ராயர் மெஸ்ஸில் காரம் போட்டுக்கொள்வது ரொம்ப விசேஷம் . அதாவது பச்சை மிளகாயை அப்படியே எண்ணையில் வதக்கி வெறும் உப்பை மட்டும் போட்டு அரைத்து விடுவது. காம்பு, சக்கை, காரம் கண்ணில் தண்ணி எல்லாம் வரும் ஒரே ரகளையாக இருக்கும். அன்னைக்கு பூராவும்  எரிச்சலாக இருக்கும் . மார்வாடி கூட்டம் பூராவும் இந்த ருசியில் மயங்கி பொண்டாட்டி மார்களுடன் கார்த்தாலையில் ஒரே கும்பல் எப்பவும்.
***************************************************

0 கருத்துகள்: