......

அன்புடன் சோமன்.....

செவ்வாய், 15 ஜூலை, 2008

விமரிசனம் என்ற பெயரால் பத்திரிகைகளும், பதிவர்களும், பின்னூட்ட பிரகிருதிகளும் அடிக்கிற கூத்தில்
ஒரு திரைப்படத்தின் சிறந்த விஷயங்கள் கூட நிஜத்திற்குப் புறம்பாகவே திரிக்கப்படுகின்றன. படம் தேவையேயில்லை, அதைப்பற்றிய எழுத்து போதும் என்று வரும் வாசகனை எழுத்து முகஞ்சுழிக்க வைக்கிறது.

தசாவதாரம் ஆரம்பக்காட்சியில் சாதாரண ரசிகனை காட்சியில் பதிய வைக்கிற முயற்சி நேர்மையானது. பட ஆரம்பத்தில் அப்படியே தலைப்பு எழுத்துகளின் முடிவில் நாமும் பயணிக்கிறோம் ஆகாயத்தில்....கீழே ஸ்டேடியத்தின் இறுதியில் ஏகோபித்த ஆரவாரத்தின் இடையே நம்மோடு கமலின் கரகரத்த குரலும் கூட வருகிறது. படத்தோடு வாழத்தொடங்குகிறோம். தான் சொல்லபோகிற கதைக்கான நியாயப்படுத்தலில் கூட ஒரு கரிசனம் தெரிகிறது கமலின் விளக்க உரையில்.. ஒருக்கால் இந்த உரையே ஒரு சாதாரண ரசிகனை எரிச்சல் மூட்டிவிடக்கூடும் என்ற பயத்தில் சொற்களை அவதானிக்கிறார்.
ஹரிஹரனின் ஓம்காரம் மிகத்துல்லியமாக ச்ருதி சேர்ந்துள்ளது. பண்டிட் ஜஸ்ராஜ் பாடும் போது இந்த உணர்வு ஏற்படும்.. அந்த ச்ருதி சுத்தம் உணர வேண்டுமானால் இறையுணர்வும், இசையுணர்வும் கால காலமாக ஊறியிருக்க வேண்டும் முதலில்.....


இன்னும் சொல்வேன்.......

0 கருத்துகள்: