......

அன்புடன் சோமன்.....

புதன், 9 ஜூலை, 2008

நீரின் தெளிவில் காணும் நிலவு

நேற்று ஒரு நல்ல சினிமா பார்த்தேன். பதினான்காம் தலாய் லாமா பற்றியது.....திபெத் பட விழாவில்....'டுன்டுன்' என்று. ஒரு நல்ல அனுபவம்.....குழந்தை தலாய் லாமா மனதைக்கொள்ளை கொள்கிறார். அந்த பீடபூமியின் அத்தனை மரபழகும் நமக்கு உறைக்கும்படியாக காட்சியமைப்பும், இசையும் உள்ளிறங்குகின்றன.....

புனிதர்களின் ஆன்மா அழிவதில்லை... அடுத்தடுத்த கூடுகளில் இருந்து தன் வியாபித்தலை தொடர்கிறது.....அந்த எளிய மனிதர்களின் நம்பிக்கையும், இறை வேட்கையும் மண்ணும் புழுதியுமாக நமக்குள் படிகிறது...

கொள்ளை போகும் அந்த குழந்தைமை நாம் தொலைத்த பருவங்களைத்துரத்த தூண்டும்....

தன் மகா ஆன்ம விசாரத்தேடலின் தொடர்ச்சியாக, இந்திய மண்ணின் எல்லைக்குள் உடலும், உயிரும் தளர்ந்து நுழைய முற்படுகிறபோது, எல்லை அதிகாரி, வினவுகிறான்....ஐயா, மிக வணக்கமுடனும், பரிவுடனும், என் ஒரு கேள்வி...தாங்கள் யார்? என.

நான்......இறையின் ப்ரதிநிதி.... நீரின் தெளிவில் நீ காணும் நிலவைப்போல........என்பார்....

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நானும் பார்த்தேன்.....மிக நன்றாக இருந்தது.