......

அன்புடன் சோமன்.....

சனி, 8 ஜனவரி, 2011

மனசெல்லாம்  மோகமாய் மகிழ்ந்து  எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ஒரு படைப்பாளிக்கு மிகவும் ஊற்றாக
இருக்கும் கணங்கள்.  எனக்கோ மிகவும் அதிகாலையில் எழுந்து கொள்ளும்  மனசு தானாக ஸ்ருதியில்  
இசைகிறது.  தீராக்  காதலும்,  இடையறாத இறை உணர்வும்,  எப்போதும் கொஞ்சம் கவலையும்  பிறவும் 
படைப்பாளிக்கு வற்றுவதே இல்லை.  மோகனம், காம்போதி,  என்ற சொல் கேட்கும்போதே  என் குரு 
நெகிழ்ந்து போவார்!.

காதல் என்பது எதனின் மீதாகவும் இருக்கலாம்.

பள்ளிப்பருவத்தில் என் தோழியொருத்தி,    எல்லாப்பசங்களும் பச்சைக்கலர்  உடுப்பென்றால்,  
இவளுக்கு மட்டும் ஒரு தனி ருசி.   அதிலும் ஒரு இங்கிலீஷ் பச்சை வைத்து இருப்பாள்.  
ஒருத்தியிடமும்  அது இல்லாமல் பார்த்துக்கொள்வாள்.  சிலசமயம் அந்த கலர் பள்ளி  
அனுமதிக்காவிட்டாலும் அடம் பண்ணி போட்டுக்கொள்ளுவாள் .  கும்பலாக நடந்து வரும்போது 
இவள் இளவரசி மாதிரியும்,  மற்றவர்கள் தோழிகூட்டம்  மாதிரியும் என் கண்ணுக்கு தோணும்.
மற்றவர்கள்  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தால் இவள் ஒரு கல்லில் நூறு மாங்காய் 
அடிப்பாள்.  அத்தனை சாமர்த்தியம்.  "நான் உங்களை பாக்கறேனான்னு இவளுக பாப்பாளுக,   
அதனால, சில சமயம் பாக்க மாட்டேன்.,  கோச்சுகிட்டு  வராம   போய்டாதீங்க" என்பாள்.  

.....................................வந்து எழுதறேன்.



அன்புடன் சோமன் ...







0 கருத்துகள்: