......

அன்புடன் சோமன்.....

சனி, 7 மார்ச், 2009

உன்னைப்போல் ஒருவன் படம் உண்மையிலேயே நேர்மையாக எடுக்கப்பட்டதா அது வாசகனை வழக்கம் போல ஏமாற்றிவிட்டதா என்று என் நண்பர்கள் கும்பல் சின்னதாக அரட்டையில் ஆரம்பித்து ரகளையாகி பேசாமல் வீட்டுக்கு வந்தோம். தூக்கம் போச்சு. எவனோ எப்படியோ படம் எடுத்து கல்லாப்பெட்டியை நிரப்ப நாம் ஏன் அடித்துக்கொள்ள வேண்டும் என்று. இருந்தாலும் ஒரு நிம்மதி.

முன்னாபாய், வெட்னஸ் டே, சர்க்கார், கத பறையும் போள், இதையெல்லாம் பார்க்கும் போதே வயிற்றை கலக்கும் எங்களுக்கு. தமிழில் எதை எவன் கைமா பண்ண போகிறானோ என்று . வாஸ்தவம் தான். பைசா செலவில்லாமல் எவனோ வலிந்து பெற்ற பிள்ளைக்கு அப்பன் முறை கொண்டாடிவிட்டு போவதில் நம் ஆட்கள் கில்லாடிகளாச்சே.

படம் பூராவும் கமல் துருத்திக்கொண்டு இருக்கிறார். ஒரு மிக மிக சாதாரணமான மனிதனின் உயிர்ப்பான செயல்பாடுகள் தான் படத்தின் மையம். சிறுமை கண்டு பொங்கும் எந்த ஒரு கதையும் தன்னை எளிதாக நகர்த்திக்கொண்டு செல்லும். கமல் ஹாசனோ, மோகன் லாலோ வேண்டியதில்லை.

இங்கே கமல் அடிக்கும் ஜல்லிகள் வெட்டி.

0 கருத்துகள்: